இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயனடைவதற்காக பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த நிலையில் 6000 ரூபாய் வழங்கும் பிரதம மந்திரியின் விவசாயிகள் ஊக்கத்தொகை திட்டத்திற்கான புதிய பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

இதுவரை திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் உதவித்தொகை பெறாத விவசாயிகள் தற்போது இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இதற்கு தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, சிட்டா, குடும்ப அட்டை, குறிப்பாக நிலம் யார் பெயரில் உள்ளதோ அவர் மட்டும்தான் பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.