இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயன் பெறும் விதமாக பி எம் கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் நிதி உதவி தேவை வழங்கப்படுகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் தற்போது வரை 14 தவணை பணம் வழங்கப்பட்டு உள்ள நிலையில் 15வது தவணை 2000 ரூபாய் நவம்பர் கடைசி வாரம் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறப்படுகிறது.