கைலி ஜேமிசனுக்கு பதிலாக இலங்கை அணியின் கேப்டன் அதிரடி ஆல்ரவுண்டரான தசுன் ஷானகா சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்டமான கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான 16வது சீசன் போட்டிகள் எப்போது தொடங்கும் என எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், 16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஏ மற்றும் பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது..

இதில் ஒவ்வொரு அணியும் தங்களுடைய பிரிவிலுள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், மற்றொரு பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோதுகின்றன.. இதில் மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன..

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைலி ஜேமிசன்  காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முதுகுத்தண்டு காயம் காரணமாக நியூசிலாந்தை சேர்ந்த ஜேமிசன் விலகியுள்ளதால் இவருக்கு பதிலாக இலங்கை அணியின் கேப்டன் அதிரடி ஆல்ரவுண்டரான தசுன் ஷானகா சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..