5 முறை கோப்பையை வென்று கொடுத்த மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக அளவில் அதிக புகழ் கொண்ட தொடர்களில் ஐபிஎல் தொடருக்கு முக்கிய இடம் உண்டு. 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரின் மதிப்பு இன்று பல்லாயிரம் கோடியை தாண்டி சென்றுள்ளது. இதனால் சர்வதேச கிரிக்கெட் காலண்டர்களில் ஐபிஎல்லுக்கு என தனி இடத்தை கேட்டு பெரும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த 15 ஆண்டுகால சாதனையை கொண்டாட இன்கிரிடிபில் பிரீமியர் லீக்  அவார்ட்ஸ் (incredible premier league award ipl) என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 5 முறை கோப்பையை வென்று கொடுத்த மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எனவே தோனியை முந்தி சிறந்த கேப்டன் பட்டத்தை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.. மேலும் சிறந்த பேட்டருக்கான  விருதை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவிலியர்க்கு தரப்பட்டது. இவருக்கு அடுத்தபடியாக பட்டியலில் சுரேஷ் ரெய்னாவின் பெயர் இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் சிறந்த பவுலராக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ஜஸ்பிரிட் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்..

ஒரு சீசனில் சிறப்பாக செயல்பட்ட பேட்ஸ்மேனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு சீசனில் சிறப்பாக செயல்பட்டபவுலராக  சுனில் நரைன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் ஐபிஎல்லில் ஒட்டுமொத்தமாக சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் என்ற விருதை கொல்கத்தா அணி வீரர் ஆண்ட்ரே ரசலுக்கு தரப்பட்டுள்ளது.