நாடு முழுவதும் வட மாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல மாநிலங்களின் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பல மாநில அரசுகள் தக்காளி விலை குறைப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் ரேஷன் கடைகள் மூலமாக தக்காளி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த மூன்று மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனபடி மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இனிவரும் நாட்களில் நாசிக், அவுங்கரங்காபாத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கூடுதல் தக்காளி அனுப்பப்பட இருப்பதால் கூடிய விரைவில் விலை குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.