கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலின் போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. இந்த திட்டத்தில் ஏற்கனவே 5 கிலோ இலவசமாக அரிசி மக்களுக்கு வழங்கப்படும் நிலையில் அரிசி ஒதுக்கீடு குறைந்த காரணத்தால் வாக்குறுதி அறிவிக்கப்பட்டபடி 10 கிலோ அரிசியை அரசால் வழங்க முடியவில்லை.

அதற்கு பதிலாக மீதமுள்ள ஐந்து கிலோ அரிசிக்கு பணத்தை வழங்க முடிவு செய்தது. இதனையடுத்து ஒரு கிலோ அரிசிக்கு 34 ரூபாய் என்ற கணக்கில் மொத்தம் ஐந்து கிலோ அரிசிக்கு 170 ரூபாய் அட்டைக்தாரர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. எனவே ரேஷன் அட்டைதாரர்கள் ஆதார் எண் எண்ணை வங்கி கணக்கோடு இணைப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.