ஆதார் என்பது இந்திய மக்களின் முக்கிய ஆவணமாக இருக்கிறது. ஆதார் அட்டை வைத்திருப்பதற்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கு அரசு தற்போது முடிவு செய்துள்ளது. ஆனால் அதற்கு ஆதார் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும் .ஆதார் அட்டை பத்து வருடங்கள் வரை புதுப்பிக்காமல் இருந்தால் இந்த வசதியை பெற முடியாது. மக்கள் 10 வருட ஆதார் அட்டை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியை டிசம்பர் 14/2023 போல் செய்து முடிக்க வேண்டும். மேலும் முன்னதாக ஆதார் அப்டேட் செய்ய 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் தற்போது அரசு ரத்து செய்துள்ளது . அரசின் இந்த அறிவிப்பால் இ சேவை மையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அப்டேட் செய்வதில் சற்று தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.