நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் பிரகாசம் (எ) குட்டி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளரான இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு திருமண விழாவில் பெண் நிர்வாகி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஏற்கனவே கட்சித் தலைமையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அந்தப் பெண் தனது கணவருடன் சென்று திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் 6 பிரிவுகளின் கீழ் பிரகாசம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே சமயம், தனது கணவர் மீது சுமத்தப்பட்டுள்ள புகாரை மறுத்துள்ள பிரகாசத்தின் மனைவி, குறிப்பிட்ட அந்தப் பெண்ணுக்கு கட்சியில் பதவி வழங்காத காரணத்தால் திட்டமிட்டு பொய் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரும் போலீசில் புகார் அளித்துள்ளதால் தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.