ராகவா லாரன்ஸ் தமிழ் திரை உலகில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கி வருகிறார். இவர் இயக்குனராக களம் இறங்கி இயக்கிய அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது. கடைசியாக இவர் நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது. அடுத்தது  காலபைரவர், புல்லட், காஞ்சனா-4 என தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”மாற்றம் என்ற அமைப்பை ஆரம்பித்து என்னால் முடிந்ததை என்னுடைய சொந்த பணத்தை வைத்து செய்து வருகிறேன். தற்போது ‘காஞ்சனா-4’ படத்தில் நடிக்கிறேன். இதன்பிறகு பென்ஸ் படத்திலும், கால பைரவா படத்திலும் நடித்து வருகிறேன்.

விஜயசாந்தி தெலுங்கு சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறுவார்கள். அதே போல நயன்தாராவை கூப்பிடுவது தப்பு கிடையாது. அவர் நிறைய சாதனைகளை செய்திருக்கிறார். அதை தற்போது அவர் வேண்டாம் என்று சொல்கிறார் என்றால் அவருடைய விருப்பம். விஜய் எனக்கு நண்பர். அவர் எடுத்துள்ள முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். சினிமாவில் சாதியை திணிப்பது தவறு” என்று கூறியுள்ளார்.