
இயக்குனர் சு.அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் வீரதீரசூரன். இது விக்ரம் நடிக்கும் 62 ஆவது படம். இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்தை எச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை பட குழு உறுதி செய்துள்ளது.
முதலில் இந்த படத்தில் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் வெளியீட்டிற்கு பிறகு தான் முதல் பாகம் உருவாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விக்ரமிடம் உங்களுக்கு பிடித்த ஐபிஎல் அணி எது? என்று கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு பதில் அளித்தவர் இன்று ஹைதராபாத்தில் இருக்கிறேன் அதனால் SRH அணியை ஆதரிப்பேன். கொல்கத்தாவிற்கு சென்றால் KKR ஐ ஆதரிப்பேன். ஆனால் என்னுடைய இதயம் எப்போதும் சிஎஸ்கே உடன் தான் இருக்கும்” என்று கூறியுள்ளார்.