பஞ்சாப் மாநிலம் பாக்வாரா பகுதியில் உள்ள பிரண்ட்ஸ் காலனியை சேர்ந்த பிரபல ஜோதிடர் அபிசேக் ராவல், தனது மனைவியின் நெருங்கிய தோழி ஷீலாவிடம் (பெயர் மாற்றப்பட்டது) ஒரு சாப்ட்வேர் மூலம் குரலை மாற்றி பேசும் உத்தியை பயன்படுத்தி பலாத்காரம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போனில் குரலை மாற்றும் செயலியை பயன்படுத்தி, தனது மனைவி போல பேசி ஷீலாவை ஷாப்பிங் செய்ய வருமாறு தனியாக வரவழைத்தார். இதனால் தனது தோழி அழைத்துள்ளதாக நம்பி அங்கு சென்றார். அப்போது அபிசேக் ராவலே அந்த பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதனை வீடியோ மட்டும் புகைப்படம் எடுத்து வைத்து அபிசேக், அந்த பெண்ணை மிரட்டி மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த ஹோலி பண்டிகையின்போதும் ஷீலாவை கட்டாயமாக தனது ஆசைக்கு அடிபணிய வைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஷீலா அபிசேக்கின் ஆசைக்கு மறுப்பு  தெரிவித்ததால் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

இதுகுறித்து ஷீலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் அபிசேக்கை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றிய செல்போனில் பல்வேறு பெண்களின் ஆபாச படங்கள் இருந்ததும் வெளியாகியுள்ளது. இதனால் பல பெண்களை ஏமாற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.