பொதுவாக உலகில் அனைத்து உயிரினங்களின் வாழ்க்கைக்கும் தண்ணீர் மிக முக்கியமானது. நீரில்லாத பட்சத்தில் எந்த உயிரினத்தாலும் வாழவே முடியாது என்பது நாம் அனைவரும் தெரிந்தது. மனிதர்களை பொறுத்தவரை தண்ணீர் குடிப்பதற்கு மட்டுமல்ல பல சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இன்றியமையாததாக உள்ளது.

ஆனால் வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காத விலங்கு ஒன்று உள்ளது என்றால் நம்மால் நம்ப முடியாது. ஆம். கங்காரு எலி தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. செரிமான அமைப்பு சீறான முறையில் இயங்குவதற்கு தண்ணீர் அவசியம் அற்றது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. இவை மிகவும் வேகமாக ஓடும் திறன் கொண்ட கங்காரு எலிகள் ஒரு நொடியில் சுமார் ஆறு மீட்டர் தூரம் செல்லக்கூடியது.