
பொதுவாக மாரி செல்வராஜ் படங்கள் சாதி ரீதியாக எடுக்கப்படும் என சிலர் குற்றம் சாட்டி வருவது வழக்கம். அந்த வகையில், இயக்குனர் பிரவீன் காந்தி நீண்ட காலமாகவே இயக்குனர் பா ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் சாதி ரீதியாக படம் எடுத்து வருவதாக தொடர்ச்சியாக குற்றம் சாடி வருகிறார். தற்போது வாழை திரைப்படம் குறித்து வாழை – கோளை என விமர்சனம் செய்துள்ளார்.
படம் குறித்து பேசி அவர், வாழையை வாழ வைக்க எத்தனை ஜாதிக்காரன் தேவைப்படுகிறான் பாருங்க. பாலா_______ சரத்குமார்_______ நெல்சன்______ (சாதி பெயர்கள் குறிப்பிட விரும்பவில்லை அதற்காக காலியாக விடப்பட்டுள்ளது.)மிஷ்கின் என்ன ஜாதி என்று தெரியவில்லை என்று படம் பார்த்து பாராட்டிய பிரபலங்களின் பின்புலங்களை ஆராய்ந்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் அதை வெளிப்படுத்தியுள்ளார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் படத்தில் கூட யாரையும் நேரடியாக ஜாதி பெயர் குறிப்பிட்டு மாரி செல்வராஜ் எங்கேயும் காட்டவில்லை. ஆனால் ஜாதியை வைத்து படமெடுக்கிறார்கள் எனக் கூறிவிட்டு நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை ஒவ்வொருவரும் என்னென்ன ஜாதி என நேரடியாக அந்த ஜாதி பெயரை குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இப்போது சொல்லுங்கள் யாருக்கு ஜாதிய எண்ணம் அதிகமாக இருக்கிறது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.