
HCL நிறுவனமானது தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் அலுவலகத்திற்கு வராமல் இருப்பது விடுமுறையாகக் கருதப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது மாதத்தில் மொத்தம் 12 நாள்கள் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது.
அதற்கும் குறைவாக ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்தால், நிறுவனம் இல்லாத ஒவ்வொரு நாளும் விடுமுறையாக கருதப்படும். பணியாளருக்கு விடுப்பு இல்லாமல் போனால், தினசரி சம்பளம் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.