தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக பாஜகவின் தலைவர் ஆனார். இந்நிலையில் தமிழக பாஜகவின் பொறுப்பாளராக மத்திய மந்திரி கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவர் தமிழக பாஜக தலைவரை தேர்வு செய்வார் என்று கூறப்படுகிறது. புதிய மாவட்ட செயலாளர்கள் பாஜகவில் நியமிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பாஜகவில் உள்கட்சி தேர்தல்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்திலும் நடைபெறுகிறது.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் பதவிக்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் போட்டியிடுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக வானதி சீனிவாசன் மற்றும் அண்ணாமலை இடையே கடும் போட்டி நிலவுகிறதாம். தற்போது புதிய தலைவர்களுக்கான வாழ்த்துப் பதிவில் வானதி சீனிவாசன் அண்ணாமலையை மட்டும் தவிர்த்து விட்டு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை டேக் செய்து பதிவிட்டுள்ளாராம். இதன் காரணமாக வானதி சீனிவாசன் பாஜக தலைவராக தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது. மேலும் அண்ணாமலை மற்றும் வானதி  சீனிவாசன் இடையே பாஜக மாநில தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுவதாக கூறப்படும் நிலையில், இந்த மாதத்திற்குள் புதிய தலைவர் யார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.