இந்தியாவில் அதிக அளவு மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதை பயன்படுத்தி புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்ட பல வகையான சேவைகளை மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும் whatsapp பயன்படுத்தப்படுகின்றது. அதற்கு முதலில் உங்களது தொலைபேசியில் DMRC எண் 9650855800 என்ற எண்ணை சேமிக்க வேண்டும். அதன் பிறகு வாட்ஸ் அப் சாட்டில்  hi என்று மெசேஜ் செய்து அனுப்ப வேண்டும்.

அதன் பிறகு விருப்பமான மொழியை தேர்வு செய்து டிக்கெட் வாங்க அல்லது மீண்டும் டிக்கெட் பெற என்ற ஆப்ஷனில் டிக்கெட்டுக்கான உங்கள் தொடக்க மற்றும் இறுதி ஸ்டேஷனை உள்ளிட வேண்டும். தேவையான டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும் உள்ளிடலாம் . டிக்கெட்டுக்கு பணம் செலுத்த உங்களது கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்த வேண்டும் இல்லையென்றால் whatsapp அல்லது யுபிஐ விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அதன் பிறகு மெட்ரோ qr டிக்கெட் வரும் இதனை பயன்படுத்தி நீங்கள் மெட்ரோவில்  பயணம் செய்யலாம்.