
பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி அளித்துள்ள பேட்டியில், ஜோடி படத்தில் நான் நாடகக் காதல் குறித்து பேசியுள்ளேன். சினிமா வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறேன் .என்னிடம் ஜல்லிக்கட்டு குறித்து ஒரு ஸ்கிரிப்ட் உள்ளது. அந்த ஸ்கிரிப்டில் அனைத்து வேலைகளுமே முடிந்து விட்டது. கடந்த வருடம் வெற்றிமாறனுக்கு இந்த கதை குறித்து மெசேஜ் செய்தேன்.
ஆனால் அவர் எந்த ஒரு ரெஸ்பான்ஸ் கொடுக்கவில்லை. நான் வைத்திருக்கும் ஜல்லிக்கட்டு தொடர்பான ஸ்கிரிப்ட் அருமையாக இருக்கும். என்னை ரொம்ப உசுப்பி விட்டால் வாடி வாசலுக்கு போட்டியாக அதை எடுத்து வாடி ஆடி பார்த்திடலாம் என்று வெற்றிமாறனுக்கு சவால் விடுகிறேன் என்று கூறியுள்ளார்.