ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா தன்னிடம் உள்ள ஆயுதங்களை வைத்து உக்கிரைன் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. உக்கிரைனுக்கு பல நாடுகளிலும் இருந்தும்  ஆயுதங்களை வழங்கி வருகிறது. இந்த போரில் ரஷ்ய பாதுகாப்பு படையினரோடு இணைந்து அந்த நாட்டில் இணைந்து வந்த  வாக்னர்  எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு உக்ரைன் படை மீது தாக்குதல் நடத்தி வந்தது.

வாக்னர் குழுவின் தலைவராக யெவ்ஜெனி பிரிகோஸின் ரஷ்ய ராணுவத்தின் மீது  பல குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இந்நிலையில்  யெவ்ஜெனி பிரிகோஸி விமான விபத்தில் மரணமடைந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது அதன்படி ஒரு ஜெட் மானத்தின் பயணிகளின் பட்டியலில்யெவ்ஜெனி பிரிகோஸி பெயர் இடம் பெற்றிருப்பதாகவும் அந்த விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த அனைவரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .