தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியின் ஓர் அங்கமாக வாக்காளர் விவரங்களை வீடு வீடாக சென்று சரி பார்க்கும் பணி வருகின்ற ஜூலை 21ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரகாஷ் ஆகும் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் வீடு வீடாகச் சென்று வாக்காளரின் விவரங்களை சரி பார்க்கும் பணி ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும். வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணி அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும்.

அதன் பிறகு பெயர்களை சேர்த்தல் மற்றும் நீக்கல் போன்ற பணிகளை மேற்கொள்ள உரிய படிவங்களை நவம்பர் 30ம் தேதி வரை வழங்கலாம். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும்.மேலும் இணையதளம் மூலமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு www.voters.eci.gov.in மற்றும் http://voterportal.eci.gov.in ஆகிய இணையதளங்களை, வாக்காளர்கள் உதவி கைப்பேசி செயலியை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.