பொதுவாக வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் மற்றும் டீசல்  நிரப்புவார்கள். ஆனால், பெட்ரோல் பங்கில் சில இலவச வசதிகளும் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியாது. அதாவது இலவசமாக வாகனத்திற்கு ஏர் நிரப்பிகொள்ளலாம். இது அனைவருக்குமே தெரிந்தது தான்.

ஆனால் தெரியாத சில விஷயங்கள் இருக்கிறது. அதாவது அரசின் விதிப்படி இந்த 6 இலவச வசதியை கொடுத்தால் மட்டுமே பெட்ரோல் பங்க் உரிமம் வழங்கப்படும். அதன்படி ஏதேனும் விபத்து ஏற்பட்டால் பக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்குச் சென்று முதலுதவி செய்யலாம். தீயை அணைக்கும் கருவியை எடுத்து  பயன்படுத்தலாம். அங்குள்ள குடிநீர் மற்றும் கழிப்பறையை பயன்படுத்தலாம். அவசரத்திற்கு அங்குள்ள தொலைபேசியை பயன்படுத்தலாம்.