
இந்தியாவில் சுங்க கட்டணம் வசூலிக்க புதிய முறையை மத்திய அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய வழி செலுத்துதல் செயற்கைக்கோள் அமைப்பான ஜி என் எஸ் எஸ் அடிப்படையில் கட்டண வசூல் செய்யப்பட்டு வருகிறது. NH -275 இன் பெங்களூரு மற்றும் மைசூர் பிரிவு, NH -709 இன் பானிபட் – ஹிசார் பிரிவு (ஹரியானா) செயல்படுத்தப்படுகிறது.
முடிவுகளைப் பொறுத்து இது மற்ற நெடுஞ்சாலைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறையில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டுமே வாகன ஓட்டிகள் கட்டிடம் செலுத்த வேண்டும் எனவும் கருதப்படுகிறது.