
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பதிலடி கொடுத்த நிலையில் பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் அத்து மீறி தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியாவும் அதற்கு பதிலடி கொடுத்து வந்த நிலையில் போர் பதற்றம் அதிகரித்தது. ஆனால் போர் முடிவுக்கு வந்து விட்டதாக அமெரிக்க அதிபர் நேற்று அறிவித்த நிலையில் இதனை மத்திய அரசும் உறுதிப்படுத்தியது.
இந்நிலையில் தற்போது அதிபர் ட்ரம்ப் ஒரு பதிவினை போட்டுள்ளார். அந்த பதிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அசைக்க முடியாத தலைமையை நினைத்து பெருமைப்படுகிறேன். போர் நடந்திருந்தால் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பார்கள். ஆனால் அதனை பாகிஸ்தான் மற்றும் இந்தியா நிறுத்திவிட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுக்க உங்களுக்கு அமெரிக்கா உதவி செய்ததில் என்பதில் எனக்கு பெருமையாக இருப்பதோடு இரு நாடுகளுடனும் வர்த்தகத்தை கணிசமாக உயர்த்த முடிவு செய்துள்ளேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற உள்ளேன் இந்த பிரச்சனைக்கு மத்தியசம் செய்த தயாராக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமரை ஒரே நேர்கோட்டில் வைத்து பாராட்டியுள்ளார். அதாவது வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைப் பெற்ற வலுவான மற்றும் அசைக்க முடியாத சக்தி வாய்ந்த தலைமைகள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இரு தலைவர்களும் சரியான நேரத்தில் சாதுரியமான முடிவை எடுத்ததால் மில்லியன் கணக்கான மக்களின் உயிரிழப்புகளை தடுக்க முடிந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.