
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சித்தார்த். இவர் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த வருடம் வெளியான சித்தா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இவர் பிரபல நடிகை அதிதி ராவ் என்பவரை காதலித்து வரும் நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. இந்நிலையில் நடிகை அதிதி ராவ் நடித்துள்ள ஹீரமாண்டி வெப் தொடர் நடிகர் சித்தார்த்துக்கு மிகவும் பிடித்து விட்டதாக அவர் கூறியுள்ளார். அந்த வெப் தொடரை பார்த்து நடிகர் சித்தார்த் கண் கலங்கி அழுததாகவும் அவருக்கு பேச்சே வரவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் அந்த தொடரை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலியை உடனடியாக பார்க்க வேண்டும் என தன்னிடம் கேட்டதாகவும் அதிதி கூறியுள்ளார்.