
திரை உலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பம், சினிமா, பிசினஸ் என அனைத்தையும் நயன்தாரா மேனேஜ் செய்கிறார்.
சமீபகாலமாக நயன்தாரா நடிப்பில் ரிலீசான படங்கள் எதிர்பார்த்த அளவு அளவு வரவேற்பை பெறவில்லை. அந்த வகையில் மாதவன், நயன்தாரா நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் உருவாகியுள்ளது.
என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு, நானாக விலகினாலோ, விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீசாகி தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது. இது வரலாறு. வரலாறு தொடர்கிறது. pic.twitter.com/qIWnmi3SJK
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) April 6, 2025
இந்த படம் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. டெஸ்ட் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது குறித்து எஸ்வி சேகர் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு, நானாக விலகினாலோ, விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீசாகி தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது. இது வரலாறு. வரலாறு தொடர்கிரது என பதிவிட்டுள்ளார்.