கேரளாவில் உள்ள திருச்சூர் தொகுதியில் பாஜக கட்சியின் வேட்பாளராக நடிகர் சுரேஷ் கோபி களமிறங்கினார். இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற்று வந்த நிலையில் தற்போது திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் வரலாற்றில் முதல் முறையாக கேரளாவில் பாஜக வென்றுள்ளது. மேலும் இந்த வெற்றியை பாஜகவினர் கொண்டாடி வருகிறார்கள்.