கனடா நாட்டில் வசிக்கும் 50 வயது பெண் ஒருவர் வினோதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது மது குடிக்காமலேயே அவர் மது போதைக்கு ஆளாகியுள்ளார். இந்த அரியவகை நோய் ப்ரூவரி சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது இந்த பெண்ணின் வயிற்றில் உள்ள குடலில் தானாகவே ஆல்கஹால் உருவாகும். இது குடல் புஞ்சை நொதித்தல் மூலம் உருவாகும் நோய். இந்த பிரச்சினையால் அந்த பெண் 2 வருடங்களாக கடும் அவதிக்கு உள்ளாகினார்.

அவர் மது அருந்தாமலேயே மது போதைக்கு அடிமையானதால் 3 முறை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார். அந்தப் பெண் மருத்துவமனைக்கு செல்லும் போதெல்லாம் மருத்துவர்கள் ஆல்கஹால் குடிக்க மாட்டேன் என பெண் கூறியதை நம்பவில்லை. அதன் பிறகு பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு தான் அப்படி ஒரு பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. தற்போது அந்த பெண்மணி பூஞ்சை காளான் உணவுகள் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்கிறார். மேலும் ப்ரூவரி சிண்ட்ரோம் என்பது நீரிழிவு நோய், அலர்ஜி குடல் நோய், குடல் டிஸ்மோடிலிட்டி கோளாறுகள் மற்றும் கல்லீரல் நோய் போன்றவர்களுடன் தொடர்புடையது ஆகும்.