நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பயணிகளுடைய பயண நேரத்தை குறைக்கும் விதமாகவும் அதிவிரைவு வந்தே பாரத் ரயில்கள் ரயில்வே துறையால் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ரயில்களில் கட்டணம் அதிகம் என்பதால் நடுத்தரமாக்கல் சிரமப்பட்டு வந்தார்கள். இந்நிலையில் வந்தே பாரத் ரயில் கட்டணம் 10% வரை குறைகிறது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள ரயில்வே வாரியம் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. வெகு தொலைவை விரைவாக கடக்க வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டாலும், கட்டணம் சற்று அதிகமாக உள்ளதால், சில இடங்களில் பயணிகளில் எண்ணிக்கை குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.