விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் வட்டம் இ.குமாரலிங்கபுரம் அருகே கனிம வளம் கொள்ளையை தடுக்க தவறியதாக கூறி வட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கனிமவள கொள்ளை விவகாரத்தில் ஏழு பேரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த வகையில் நான்கு வருவாய் துறை அதிகாரிகள், நீர்வளத் துறை உதவி பொறியாளர், வேளாண் அலுவலர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.