இந்தியாவில் வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவதற்கு இந்திய வங்கிகள் கூட்டமைப்பு மற்றும் ஊழியர்கள் சங்கம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அது மட்டும் அல்லாமல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வந்தால் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஒப்பந்தம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்றும் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தால் வங்கிகளுக்கு 7898 கோடி கூடுதல் செலவாகும் எனவும் கூறப்படுகிறது.