வங்காள தேசத்தில் மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் மிகப்பெரிய கலவரமாக வெடித்த நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இந்நிலையில்  ஷேக் ஹசீனா தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார். அவர் கூறியதாவது, அவர்கள் மாணவர்கள் சடலங்களை வைத்து ஆட்சிக்கு வர விரும்பினார்கள். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் நானே பதவி விலகினேன்.

நான் செயின்ட் மார்ட்டின் தீவை விட்டுக் கொடுத்து வங்காள விரிகுடாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை ஏற்படுத்த அனுமதி கொடுத்திருந்தால் அங்கு என்னுடைய ஆட்சி தொடர்ந்திருக்கும். ஆனால் அதற்கு நான் சம்மதிக்கவில்லை. என் மக்களிடம் தயவுசெய்து தீவிரவாதிகளின் கைப்பவைகளாக ஆக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அங்கு பல தலைவர்கள் கொல்லப்பட்ட நிலையில் ஏராளமான தொழிலாளர் தாக்கப்படுகிறார்கள். அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகளை பார்க்கும்போது என்னுடைய இதயம் கண்ணீர் வடிக்கிறது. மேலும் என்னுடைய தந்தையும் குடும்பமும் சேர்ந்து உருவாக்கிய வங்கதேசத்தின் எதிர்காலத்திற்கு நான் என்றென்றும் துணையாக இருக்கிறேன் என்று கூறினார்.