தென் கிழக்கு அரபி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த வளிமண்டல சுழற்சி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று‌ இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வருகிற 14-ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதன் காரணமாக வருகிற 14-ம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த ‌ தாழ்வு இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் வருகிற ‌ 15 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.