பெங்களூருவில் உள்ள ஒரு டிஜிட்டல் வால்ட் மற்றும் பட எடிட்டிங் நிறுவனத்தில், ஒரு சின்ன விவாதம் கொடூரமான கொலைச் சம்பவத்தில் முடிந்துள்ளது.

24 வயது தொழில்நுட்ப ஊழியர் வம்சிக்கும், அவரது 41 வயது மேலாளர் பீமேஷ் பாபுவுக்கும் இடையே அலுவலகத்தில் விளக்குகளை அணைப்பது தொடர்பாக அடிக்கடி சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலாளர் பீமேஷ் பாபு, அலுவலக விளக்குகளை வழக்கமாக அணைக்கும்படி வற்புறுத்தியது, ஊழியர் வம்சிக்குத் தொடர்ச்சியான மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

சம்பவ தினத்தன்று, நள்ளிரவு 1 மணி அளவில், இந்த “லைட்ஸ் ஆஃப்” விவாதம் உச்சக்கட்ட கோபமாக மாறியது. ஆவேசமடைந்த வம்சி, பீமேஷ் பாபுவின் முகத்தில் மிளகாய்த் தூளைத் தூவியதோடு, அங்கிருந்த இரும்பு டம்பெல்லால் (Dumbbell) அவரது தலை மற்றும் முகத்தில் பலமுறை தாக்கி பயங்கரமான கொலையை நிகழ்த்தினார்.

வாடகை அலுவலகத்தில் நடந்த இந்தச் சம்பவத்தின் கோரம் குறித்து உணர்ந்த வம்சி, பயத்தில் அங்கிருந்து தப்பியோடி நேரடியாக காவல் நிலையத்தில் சரணடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட போதிலும், பீமேஷ் பாபு ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், வம்சியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும், பணிச்சூழல் மன அழுத்தம் (Workplace Stress) மற்றும் ஊழியர்களின் மன ஆரோக்கியம் குறித்து நிறுவனங்கள் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.