இருசக்கர வாகனத்தை திருடும் நபர் ஒருவர் பூட்டி இருக்கும் வாகனத்தை எவ்வாறு திருடுகிறார் என்பதை திருட வந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து அதனை வெளியிட்டுள்ளார். இன்றைய காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் திருடர்கள் தங்களின் கைவரிசையை காட்டி விடுகின்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனங்களை தூக்கிச் செல்கின்றனர்.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் லாக் போடப்பட்டிருக்கும் வாகனத்தை திருடர்கள் எவ்வாறு திருடி செல்கின்றனர் என்பதை திருட வந்த நபர் ஒருவர் போலீசார் முன்பு செய்து காட்டியுள்ளார். அதனை அவதானித்த காவலர் மட்டுமல்லாமல் பார்வையாளர்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.