
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரல் ஆகிறது. பெரும்பாலும் பலரது கையிலும் செல்போன் இருப்பதால் உலகின் எந்த மூலையில் எந்த சம்பவம் நடந்தாலும் அப்படியே வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுகிறார்கள். சில நேரங்களில் வீடியோக்கள் மூலம் சில தவறுகள் கூட கண்டுபிடிக்கப்பட்டு போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது. இந்த வீடியோவை பார்த்துநெட்டிசன்கள் பலரும் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் அதனை பகிர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதாவது ஹரியானா மாநிலத்தில் ஒரு பெண் தன் தாயை மிகவும் கொடூரமாக அடித்து தாக்குகிறார். அந்த தாய் வேண்டாம் என்னை விட்டு விடு என்று கூறி கதறி அழுகிறார். இருப்பினும் அந்த மகள் ஈவு இரக்கமே இல்லாமல் தன் தாயை அடிப்பதோடு தகாத வார்த்தைகளால் பேசுகிறார். இந்த சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்பது சரிவர தெரியாது நிலையில் வீடியோ மட்டும் வைரல் ஆகிறது. மேலும் அந்த மகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் போலீசாரை டேக் செய்து பதிவிட்டு வருகிறார்கள்.
This is absolutely horrifying! A daughter torturing her own mother @cmohry @police_haryana @DGPHaryana @PMOIndia, urgent action is needed! Identify and punish the culprit. #JusticeForMother“pic.twitter.com/TGefDrIcdU
— Goonj – A voice of change (@avoiceofchange_) February 27, 2025