தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. எனவே அடிக்கடி சரியாக ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட அப்டேட்டுகளை செய்ய வேண்டும்.

அதன்படி ஆன்லைன் மூலமாக ரேஷன் கார்டில் எப்படி பெயர் நீக்குவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இதற்கு முதலில் தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு www.tnpds.gov.in சென்று விருப்பமான மொழியை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்பதை கிளிக் செய்து குடும்ப உறுப்பினர் நீக்கம் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களது ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

பிறகு ஓடிபி என்னை உள்ளிட்டு பதிவு செய் என்பதை கிளிக் செய்து அட்டை பிறழ்வு மற்றும் புதிய கோரிக்கைகள் ஆகியவற்றை கிளிக் செய்து ரேஷன் எண் ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும். பிறகு குடும்ப உறுப்பினர் நீக்கம் என்பதை தேர்ந்தெடுத்த யாரின் பெயரை நீக்க வேண்டுமோ அதனை செலக்ட் செய்து எதற்காக பெயரை நீக்கம் செய்கிறீர்கள் என்ற காரணத்தை கூறி தேவையான ஆவணங்களை இணைத்து பதிவு செய் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ஓரிரு நாட்களில் உங்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டு விடும்.