தமிழகத்தில் தக்காளி விலையானது கடும் உச்சத்தை தொட்டதால் அரசின் புதிய நடவடிக்கையின் காரணமாக ரேஷன் கடைகளில் தக்காளி விலை மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை  உயர்வானது மக்களை பாதிக்காத வண்ணம் பண்ணை பசுமை கடைகள் மூலமாக 82 ரேஷன் கடைகளில் விற்பனை ஆரம்பித்துவிட்டது. மேலும் ரேஷன் கடைகளில் ஒருவருக்கு ஒரு கிலோ என்று 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடைகளில் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ரேஷனில் பாதிக்கு பாதி என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட ரேஷன் கடையில் மட்டுமே தற்காலிக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனால் அந்த கடைகளில் எல்லோரும் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கிடையில் ரேஷன் கடையில்  தக்காளி விற்பனை செய்யப்படுவதால் கூட்டுறவு சங்கங்களுக்கு ஒரு கிலோவிற்கு 20 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதனை தற்போது அரசு ஈடு செய்கிறது. மேலும் இந்த அறிவிப்பை அனைத்து ரேஷன் கடைகளுக்கு ம் விரிவுபடுத்தினால் மக்கள் அதன்மூலம் பயனடைவபார்கள் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.