அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசின் மூலமாக அரிசி, கோதுமை உள்ளிட்ட பல ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரிசி மற்றும் கோதுமை தட்டுப்பாட்டின் காரணமாக அனைத்து மாநிலங்களுக்கும் அரிசி மற்றும் கோதுமை வழங்குவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 20 கிலோ வரைக்கும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 20,000 மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுவதாக தமிழக அரசு சார்பில் இந்திய உணவுக் கழகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

மேலும் கர்நாடக மாநிலத்திலும் 2.8 லட்சம் டன் அரிசி தேவைப்படுவதாக கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு அதனை மறுத்துள்ளது. மாநில அரசுக்கு தேவைக்கேற்ப சந்தைகளில் இருந்து அரிசி நேரடியாக வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய உணவு கழகம் தெரிவித்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் தமிழக ரேஷன் கடைகளில் மூலமாக இலவச அரிசி மக்களுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.