மதுரை திருநகரில் பாண்டியன் கூட்டுறவு சிறப்பு அங்காடி புதுப்பிக்கப்பட்டு தரம் உயர்த்தப் பட்டுள்ளது. இந்த பணிகளை கூட்டுறவுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன்பிறகு ஜெ. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர் பேசியதாவது, தமிழகத்தில் 25,000 நிரந்தர நியாய விலை கடைகளும், 10,000 பகுதி நேர கடைகளும் செயல்பட்டு வருகிறது. நம்ம ஊரு நியாய விலை திட்டத்தின் கீழ் 4845 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 106 திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்குகளில் ரூ.106 கோடி மதிப்பீட்டில் மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் கடத்தல் சம்பவங்கள் மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்கு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடத்தல் தொடர்பாக 13,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 132 பேர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.