வேலை, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு புலம்பெயரும் தமிழர்களுக்கு, அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் அயல் நாடு மற்றும் வெளி மாநில தமிழர்கள் அயலக தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக இணைந்து, வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி, திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18-55 வயது வரை உள்ளவர்கள் http://nrtamils.tn.gov.in- ஒருமுறை பதிவு கட்டணமாக ரூ200 செலுத்தி உறுப்பினர் அட்டை பெற்றால், காப்பீட்டுத் தொகை ரூ.5,00,000, ரூ.10,00,000 பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. முழு விவரங்களை லிங்கில் பார்க்கவும்.