தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. இவர் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். நடிகை அனுஷ்கா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக தன்னுடைய உடல் ‌ எடையை அதிகரித்த நிலையில் அதன் பிறகு எடை குறையவில்லை. இதனால் சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் நடிகை அனுஷ்கா இருந்த நிலையில் அவர் நடிப்பில் சமீபத்தில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படம் வெளியானது.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஒருவரின் படத்தில் நடிகை அனுஷ்காவுக்கு நடிக்க அழைப்பு வந்துள்ளது. அந்தப் படத்தில் நடிப்பதற்காக அவருக்கு ரூ‌.5 கோடி சம்பளம் கொடுப்பதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் அந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததால் அனுஷ்கா படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் இந்த தகவல் தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.