
தமிழ் சினிமாவின் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளராக விளங்குபவர் சுரேஷ் காமாட்சி. இவர் நடிகர் சிம்பு நடித்த மாநாடு படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றி பெற்றது. இவர் தற்போது நடிகை அபர்னதி நடித்த நாற்கரப்போர் என்ற படத்தை தயாரித்துள்ளார்.
நடிகை அபர்ணதி தமிழ் சினிமாவில் தேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு இவர் ஜெயில் மற்றும் இருகப்பற்று என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நாற்கரப்போர் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது நாற்கரப்போர் ப்ரோமோஷனில் படக்குழுவினர் ஈடுபட்டனர். அந்த வகையில் ப்ரோமோஷனில் ஈடுபட்டிருந்தபோது தயாரிப்பாளர் சுரேஷ் மீனாட்சிஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அதாவது ப்ரோமோஷனுக்கு வர அவர் தயாரிப்பாளரிடம் 3 லட்சம் வரை கேட்டுள்ளார். அதோடு பல நிபந்தனங்களையும் விதித்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.