சட்டப்பேரவையில் கலை பண்பாட்டுத்துறை மீதான மானிய கோரிக்கையின் வாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தின் கலை வடிவங்கள் அழியாமல் பாதுகாக்கவும் அவற்றை வளர்ப்பதற்காகவும் 200 அரசு கல்லூரிகளில் மாணவர்களுக்கு 1.70 கோடி செலவில் கலை பயிற்சிகள் வழங்கப்படும். சென்னை அரசு கவின் கலைக்கல்லூரி நூற்றாண்டு கடந்த பழமையான கட்டிடத்திலும் 50 ஆண்டுகள் கடந்து பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள சில கட்டிடங்கலும் செயல்பட்டு வருகிறது.

மாணவர்கள் உடைய எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான வகுப்பறை வசதிகள் ஏற்படுத்தும் விதமாக அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் வரைமுறைப்படி துகிலியல், கலை வரலாறு போன்ற பிரிவுகளுக்கு வகுப்புகளும், நவீன வசதிகளுடன் கூடிய நூலகமும் கட்டுவதற்கு 20. 92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் இந்த கலை கல்லூரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய மூன்று புதிய வகுப்பறைகள் மற்றும் நூலகம் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.