
இன்றைய காலகட்டங்களில் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்து வருகிறது. இந்த ரீல்ஸ் மோகத்தால் இளைஞர்கள் பல ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் தற்போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் 20 வயது இளைஞர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்லோ மோஷனில் வீடியோ எடுக்க முயன்ற போது திடீரென 3-வது மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டார்.
இந்த சம்பவத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலியான இளைஞரின் பெயர் ஆசிப். இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஸ்லோ மோஷனில் வீடியோ எடுத்தார். அப்போது அந்த பகுதியில் பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட கதவை திறக்கும் போது தவறுதலாக கீழே விழுந்துவிட்டார். அவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இதை பார்த்து நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
आगरा – सर्राफा बाजार में हुआ दर्दनाक हादसा
➡रील बनाने के दौरान युवक की गई जान
➡स्लो मोशन में रील बना रहा था युवक
➡जाल हटाने में 3 मंजिल से नीचे गिरा युवक
➡युवक के सिर और गर्दन में आई थी गंभीर चोटें
➡गर्दन कटने के बाद लोग ले गए थे अस्पताल
➡अस्पताल पहुंचते ही डॉ ने युवक को… pic.twitter.com/ppDgtAk8fd— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) October 19, 2024