ஒடிசா கோரமண்ல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேசமயம் ரயிலில் மீட்பு பணியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் மத்திய அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ரயில் விபத்து குறித்து காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் தனது ட்விட்டரில், ரொம்பவே வெட்கக்கேடான ஒரு விஷயம் இது. இந்த காலத்தில் இத்தனை தொழில்நுட்ப வளர்ச்சி பாதுகாப்பு அம்சங்கள் வளர்ந்த பிறகு எப்படி மூன்று ரயில்கள் ஒரே நேரத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு யார் பொறுப்பேற்க போவது என கேள்வி எழுப்பிய அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக இரங்கல் தெரிவித்துள்ளார்.