ஒடிசா கோரமண்ல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேசமயம் ரயிலில் மீட்பு பணியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் மத்திய அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக அனைத்து விமான நிலையங்களுக்கும் விமான போக்குவரத்து அமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி விமான டிக்கெட்டுகளை ரத்து செய்தால் மாற்றி அமைத்தலுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் எனவும் புவனேஸ்வருக்கு வந்து செல்ல விமானங்களின் கட்டணத்தை அதிகரிக்க கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.