இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். அதனால் ரயில் பயணிகளுக்காக இந்திய ரயில்வே அடிக்கடி பல சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக ஒவ்வொரு பிரச்சனைக்கும் டோல் ஃப்ரீ எண்களை அறிமுகம் செய்துள்ளது. ரயில்களில் பயணம் செய்யும்போது இதனை பயன்படுத்தி பயணிகள் தீர்வு காண முடியும்.

அதில் ரயில் பெட்டி அழுக்காக இருந்தால் கிளீன் மை கோச் ஹெல்ப்லைன் நம்பர் ஆன 58888 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அதாவது கொடுக்கப்பட்ட எண்ணுடன் PNR நம்பரை எஸ்எம்எஸ் செய்ய வேண்டும். மேலும்  cleanmycoach.com  என்ற இணையதள பக்கத்திற்குச் சென்றும் நீங்கள் புகார் அளிக்கலாம். அதே சமயம் அசம்பாவிதம் ஏற்பட்டால் 1512 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இது போன்ற பல எண்களை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ள நிலையில் பயணிகள் அதனை அறிந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு காணலாம்.