இந்தியாவில் அதிக அளவிலான மக்கள் ரயில் பயணங்களை மேற்கொள்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த செலவில் சவுகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆனால் ரயிலில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் ரயில்வே விதிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அதன்படி ரயில்களில் இரவு 10 மணிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய சில விதிகள் உள்ளது. அதாவது டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் பரிசோதனைக்கு வரக்கூடாது, இரவு விளக்கு தவிர அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும். பயணிகள் சத்தமாக பேசக்கூடாது. மிடில் பெர்த் பயணி தூங்குவதற்கு லோயர் பெர்த் பயணி இடையூறாக இருக்கக் கூடாது. ரயிலில் உள்ள ஆன்லைன் உணவு சேவைகள் மூலம் ஆர்டர் செய்ய முடியாது. எனவே ரயிலில் பயணிக்கும் போது இதை எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.