ஹைதராபாத் மாநிலத்தில் இருந்து சூர்யா பேட்டைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நக்கீரேக்கல் பேருந்து நிலையத்தில் மூன்று பெண்கள் பேருந்தை நிறுத்தி பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வருவதால் ஓட்டுநரை நிறுத்த கூறியுள்ளனர். ஐந்து நிமிடம் நிறுத்திய பிறகு சக பயணிகள் சண்டையிட்டதால் பேருந்து ஓட்டுனர் பேருந்து இயக்கினார்.

இதனால் கடுப்பான அந்த பெண்கள் , இது எங்களோட இலவச பேருந்து, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்க வேண்டும். சூர்யா பேட்டை வந்ததும் ஓட்டுநரை அடிப்போம் என்று மிரட்டி உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஓட்டுநர் பேருந்தை போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தினார். அதன் பிறகு அந்தப் பெண்கள் அமைதியான நிலையில் ஓட்டுநர் பிறகு பேருந்து இயக்கினார்.