இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இதனால் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்க ரயில்வே நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுவாக ரயில் திட்டத்தில் ஒவ்வொரு பயணிகளுக்கும் தனித்தனியாக 13 வகையான குறியீடுகள் இருக்கும். ஒவ்வொரு குறியீட்டிற்கான விளக்கத்தை தற்போது பார்க்கலாம். அதில் முதலாவதாக PNR என்பது passenger name record. இந்த 10 இலக்க எண் மூலம் பயணிகளின் தகவல் மற்றும் டிக்கெட் முன்பதிவுகளை கண்காணிக்கலாம்.

உங்களுடைய டிக்கெட்டில் GNWL என்று இருந்தால் உறுதி செய்யப்பட்ட பெர்த் உங்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். டிக்கெட்டில் WL என இருந்தால் உறுதி செய்யப்பட்ட பெர்த் உங்களுக்கு வழங்கப்படாது. மீதமுள்ள பயணிகள் டிக்கெட்டுகளை ரத்து செய்வதை பொருத்து உங்களுக்கான சீட் வழங்கப்படும். அடுத்து டிக்கெட்டில் RAC என்று இருந்தால் பயணிகள் மற்றொரு பயணியுடன் பெர்த்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக TQWL என்று குறிப்பிட்டு இருந்தால் பிற பயணிகள் ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும்போது உங்களுக்கான இருக்கை உறுதி செய்யப்பட கூடும். அதனைப் போலவே ஒவ்வொரு ரயில் பயணியின் திட்டத்திலும் ஒரு குறியீடு இடம் பெற்றிருக்கும். இதனைப் பொறுத்து ரயில் பயணிகளுக்கு இருக்கைகள் உறுதி செய்யப்படும்.