பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் முன்னணி நடிகரான ரன்பீர் கபூரை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் கடந்த வருடம் தீபிகா படுகோனே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் தற்போது ரன்வீர் தீபிகா ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

அதன்படி மும்பையின் கிர்கான் பகுதியில் உள்ள எச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் தீபிகா படுகோனேவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவம் நல்லபடியாக நடைபெற்றதாகவும் தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.‌ மேலும் ரன்பீர் மற்றும் தீபிகா ஜோடிக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.